ஈரோட்டில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் குறிஞ்சியர் முன்னேற்றப் பேரவை தொடக்க விழா மற்றும் அதன் புதிய கொடி அறிமுக விழா இன்று ஈரோட்டில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே. சரஸ்வதி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் பேரவைத் தலைவர் குறிஞ்சி பி.சந்திரசேகரன் தனது உரையில், குறிஞ்சியர் அல்லது குறிஞ்சி வேளாளர் அல்லது குறிஞ்சி வேடர் அல்லது குறிஞ்சி சித்தனார் என்ற பொதுப் பெயரில் குறவர் சமூகத்தின் 27 உட்பிரிவுகளை அரசு ஒன்றிணைத்து, அவர்களை பழங்குடிபட்டியலில் சேர்க்க முதல்வர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மாவட்ட மற்றும் மாநில எஸ்சி, எஸ்டி விழிப்புணர்வுக் குழுக்களில் குறவர்களைச் சேர்த்து அரசுத் துறையில் குறவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநிலத்தில் 10 லட்சம் குறவர்கள் உள்ளனர், அவர்களின் மேம்பாட்டிற்கு பேரவை பாடுபடும் என கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.