மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி கூட்டு பாலியல் கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரியும் மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மேற்கு மாவட்ட தமிழ் புலிகள் கட்சி சார்பில் பள்ளிபாளையம் அடுத்துள்ள காவேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் சேகுவாரா முன்னிலை வகித்தார். தொடர்ந்து அழகேசன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஊடகப்பிரிவு செயலாளர் செந்தமிழன், மாநில இளம் புலிகள் அணி துணைச் செயலாளர் அறிவு தமிழன் மற்றும் மேற்கு மண்டல செயலாளர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் கவின், மாவட்ட செய்தி தொடர்பாளர் சரவணன், பரமத்தி வேலூர் தொகுதி செயலாளர் செல்வகுமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றிய மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.