மேலும் கல்லூரியின் துணை முனைவர். சி.நஞ்சப்பா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் நுண்ணுயிரின் அன்றாட வாழ்வியல் பயன்பாடு பற்றி கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து நுண்ணுயிரியல் துறையின் தலைவர் மைக்ரோ லூமினா சங்கத்தின் உறுப்பினர்களை அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை நேரு மகா வித்யாலயா கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை தலைவர் முனைவர் ஆர். பாக்யராஜ்
பங்கேற்று நுண்ணுயிரியல் துறையின் முக்கியத்துவம், பயன்பாடு மற்றும் வளர்ச்சி பற்றி சிறப்புரையற்றினார்.
மைக்ரோலூமினா சங்கத்தின் உறுப்பினர்களாக சந்துரு, அஞ்சு ஸ்ரீ, சங்கர் கணேஷ், சங்கமி, மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நுண்ணுயிரியல் துறையின் உதவி பேராசிரியை திருமதி ர.திவ்யஸ்ரீ நன்றியுரை வழங்கினார்.