இதன் முதல் நிகழ்வாக கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் சி நஞ்சப்பா வரவேற்றார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் மோகனசுந்தரம் தலைமை உரையாற்றினார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோபிசெட்டிபாளையம் காவல்துறை ஆய்வாளர் திரு த. சண்முகவேலு அவர்கள் பகடிவதை குற்றங்களை தடுப்பது மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவது, இளமை காலங்களில் கல்வியை நன்றாக கற்று போதை பழக்க வழக்கங்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது பற்றியும் விளக்கினார். மேலும் இணைய வழி குற்றங்கள், அதில் ஈடுபடுவது மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவது பற்றிய தகவல்களை விரிவாக எடுத்துரைத்தார். முன்னதாக கணிதவியல் துறை தலைவர் திரு. ஆரோக்யராஜ் சிறப்பு விருந்தினர் பற்றி அறிமுக உரையாற்றினார். இவ்விழாவின் இறுதியாக கணினித் துறைத் தலைவர் திருமதி சுபா அவர்கள் நன்றி உரை நல்கினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் ஒழுங்கு மற்றும் பகடி வதைக்கு எதிரான குழு உறுப்பினர்கள் திருமதி புஷ்பா, திருமதி தேன்மொழி, திரு மனோஜ் குமார், திரு பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.