ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது.
இதில் மேஜர் தியான் சந்தின் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விளையாட்டு தினத்தில், தினமும் உடல் ஆரோக்கியத்திற்க்காக நேரம் செலவிட உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராமன் அவர்கள் விழா உரையாற்றி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.