Type Here to Get Search Results !

நான் விரும்பும் கலைஞர் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி...

தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை மூலம் கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு வ.உ.சி. பூங்கா வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடந்தது. நான் விரும்பும் கலைஞர் என்ற தலைப்பில் நடந்த இந்த போட்டியில் 7-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக ஓவியங்கள் வரைந்த மாணவ-மாணவிகள் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு அருங்காட்சியத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். 

நிகழ்ச்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் பா.ஜென்சி தலைமையில் ஊழியர்கள் ஒருங்கிணைத்து  நடத்தினார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.