ஈரோடு மாவட்டம் பருவாச்சியில் பஞ்சாயத்து அலுவலகம் கட்ட பூஜை
பவானி யூனியனுக்கு உட்பட்ட பருவாச்சி பஞ்சாயத்துக்கு புதியதாக அலுவலக கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா 25.08.23 நேற்று நடந்தது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், ரு. 31.46 லட்சம் கட்டப்படுகிறது. இதற்கான பணியை வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் யுவராணி, வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் என். நல்லசிவம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பரணீதரன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.