Type Here to Get Search Results !

நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் வளாகம் கட்டித்தர கோரிக்கை மனு...


ஈரோடு மாவட்டம் பவானியில், அமைச்சர் சு. முத்துசாமி அவர்களிடம் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் மாதேஸ்வரன் மற்றும் ஏராளமான வியாபாரிகள் சேர்ந்து கோரிக்கை மனு அளித்தனர். 

அம்மனுவில் கூறியிருப்பதாவது,

பவானி வரச்சந்தை மைதானத்தில் தற்போது செயல்பட்டு  அந்தியூர் மேட்டூர் பிரிவு மெயின் ரோட்டில் இருந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது உள்ள தினசரி காய் கனி மார்க்கெட்டுக்கு செல்லும் இரு பக்கமும் உள்ள சாலைகளும் மிகக் குறுகிய அகலம் கொண்ட சாலைகளாகும். இதன் காரணமாக தினசரி காய் கனி மார்க்கெட்டுக்கு பொருள்கள் கொண்டு வரவும், எடுத்துச் செல்லவும், டெம்போ லாரி வரவும் போன்ற சிறு மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சரியான சாலை வசதி இல்லாததாலும், ஒதுக்கு புறமாக உள்ளதாலும், மயானம் அருகில் இருப்பதாலும், வியாபாரிகள் பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வர மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் தற்போது உள்ள தினசரி காய் கனி மார்க்கெட்டில் 236 சிறு வியாபாரிகள் காய்கனி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். தற்போது உள்ள தினசரி காய்கனி மார்க்கெட் வளாகமானது சிறிய இடம் ஆகும். இதில் புதிதாக காய்கனி மார்க்கெட் வளாகம் கட்டினால் தற்போது வியாபாரம் செய்து வரும் 236 வியாபாரிகள் அனைவருக்கும் இடம் கிடைக்காது. இதனால் சுமார் 100 சிறு ஏழை வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே சிறு வியாபாரிகளின் நலன் கருதியும், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதியும் தற்போது உள்ள தினசரி காய்கனி மார்க்கெட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் மார்க்கெட் வியாபாரிகளுக்கு மார்க்கெட் வளாகம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம் என குறிப்பிட்டிருந்தனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.