Type Here to Get Search Results !

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் அதிகாரிகளுக்கான நேரடி நியமனம் செய்ய எழுத்து தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 621 காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 129 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரிகளுக்கான நேரடி நியமனம் செய்ய மாநிலம் முழுவதும் 152 தேர்வு மையங்களில்  26.08.2023 நேற்று எழுத்து தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வினை ஈரோடு மாவட்டத்தில் எழுதும் 3567 (789 பெண்கள் உட்பட) தேர்வர்களுக்கு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரி மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டும், தேர்வர்களுக்கு வழங்கப்படும் வினா தாள்கள் சென்னை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திலிருந்து தேர்வாளர்களுக்காக கொண்டு வரப்பட்டு வினா தாள்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பில் வைக்கப்பட்டது.

இன்று காலை 07.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிய அதிகாரிகள் மூலம் அந்தந்த தேர்வு மையங்களுக்கு ஆயுதம் ஏந்திய காவலர் வழிகாவலுடன் எடுத்து செல்லப்பட்டு, வழிகாட்டு நெறிமுறைகளின்படி தேர்வு நடைபெற்றது.

26.08.2023 ந் தேதி 3567 பொது தேர்வாளர்களுக்கு முற்பகல் பிரதான எழுத்து தேர்வும், பிற்பகல் தமிழ் மொழி தகுதி தேர்வும் நடைபெற்றது. இந்த தேர்வுகள் அனைத்தும் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திருமதி.K.பவானீஸ்வரி, இ.கா.ப., அவர்களின் நேரடி கண்காணிப்பில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G. ஜவகர், இ.கா.ப., தலைமையில்,  துணைகுழு உறுப்பினர்களாக ஈரோடு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K.பாலமுருகன், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணைக்கண்காணிப்பாளர்  திருமதி. S.பவித்ரா,   மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  திரு. N.மணிவர்மன் ஆகியோர் நியமிக்கப்பட்டு நடத்தப்பட்டது.

 மேலும் இத்தேர்வு பணிக்கு 300 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பு குழு பொறுப்பாளர்களாகவும் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அமைக்கப்பட்டு தேர்வு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் தேர்வு மைய வெளிபுற பாதுகாப்பிற்காக ஈரோடு நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. V. ஆறுமுகம்,  மாவட்ட குற்றப்பதிவேடு கூட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. S.சேகர்  ஆகியோர் தலைமையில் 175 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களை பணிக்கு உட்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து சீர்செய்தல், தேர்வர்களின் உடைமைகளை பெற்று திரும்ப வழங்கவும், தாமதமாக வந்த தேர்வாளர்களை காவல் வாகனங்கள் மூலம் தேர்வு மையத்தில் உள்ள அவர்களுக்குண்டான தேர்வு அறைக்கு கூட்டி செல்லவும், தேர்வு மையங்களில் தேர்வாளர்கள் தாங்கள் தேர்வு எழுதும் இடத்தை எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டும் வழிநடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இத்தேர்வு சிறப்பாக நடைபெற்றது.

காலையில் நடைபெற்ற பிரதான எழுத்து தேர்வில் வேளாளர் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத நியமிக்கப்பட்ட 900 தேர்வாளர்களில் 729 தேர்வாளர்களும், வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் 2667 (789) தேர்வாளர்களில் 2210 (637) தேர்வாளர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். அதே போல் மதியம் நடைபெற்ற தமிழ்மொழி தேர்வில் வேளாளர் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுத நியமிக்கப்பட்ட 900 தேர்வாளர்களில் 727 தேர்வாளர்களும், வேளாளர் கலை அறிவியல் கல்லூரியில் 2667 (789) தேர்வாளர்களில் 2199 (636) தேர்வாளர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.