ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் சலங்காபாளையம் கிராமம் செந்தாம்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாசாணியம்மன் கோவில் நூதன உற்சவ சிலை பிரதிஷ்டை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முன்னதாக காலை விநாயகர் பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து காவிரி ஆற்றில் புனித நீர் எடுத்துவரப்பட்டு மாசாணியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்பு காலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து உற்சவர் சிலை திருவீதி விழா நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர் எஸ் எஸ் ஆறுமுகம், ஊர் காரியக்காரர் எஸ் ஆர் பழனிச்சாமி, விழா குழு தலைவர் மே.வி முருகன், கோவில் முதன்மை பூசாரி கைலாசம், கோவில் பூசாரி ஐயப்பன் மற்றும் ஸ்ரீ குமரன் விவர்ஸ் தலைவர் வெங்கடசாமி மாரிமுத்து, மகாலிங்கம் எஸ் எஸ் வடிவேல், கொடிக்கம்பம் மிராசு, நாராயணசாமி மற்றும் விழா குழுவினர் சந்திரசேகரன், முருகேசன், ராமசாமி, மாரிமுத்து, ஈஸ்வரன், பூபதி, வெங்கடேசன், நாகராஜ், முருகேசன் என்கின்ற கோ மாரிமுத்து, சென்னை பாரதி, சோமு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.