கைத்தறி கண்காட்சியை அறங்காவலர் திரு.கவியரசு அவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் கைத்தறி அமலாக்க அலுவலர் திரு K.R. ஜெயவேல் கணேசன் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பலவிதமான கைத்தறி ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
பல் துறை மாணவர்களும் ஆசிரியர்களும் கண்காட்சியை கண்டு களித்து ஆடைகளை வாங்கினர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்புத் துறையின் தலைவி திருமதி ஷாலினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் A. மோகனசுந்தரம் அவர்கள், 2015 ஆம் ஆண்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் சுதேசியத்தின் நினைவை போற்றும் வகையில் இத்தினத்தை கைத்தறி தினம் என்று கொண்டாடப்பட்டது என்றும் 9ஆம் ஆண்டாக இத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் கைத்தறி பொருட்கள் உபயோகப்பதன் பயன்களை பற்றியும் எடுத்துரைத்தார்.
கல்லூரியின் அறங்காவலர் கவியரசு அவர்கள் கைத்தறி ஆடைகளை இளைஞர்கள் உபயோகப்படுத்த முன் வர வேண்டும் என்ற விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்தினார். துணை முதல்வர் டாக்டர் சி. நஞ்சப்பா அவர்கள் நம் அன்றாட வாழ்வில் கைவினை பொருட்களின் பயன்பாட்டை பற்றி எடுத்துரைத்தார். தமிழ்நாடு கைத்தறித் துறை அமலாக்க அலுவலர் ஜெயவேல் கணேசன் அவர்கள் அசல் கைத்தறி ரகங்களை எவ்வாறு அறிவது என்றும், அது குறித்து இணையதளங்களில் எவ்வாறு கண்டறிவது என்பதை பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரி பல்துறை மாணவர்களுக்கிடையான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. அதில் சிறந்த அணிவகுப்பு தந்த மூன்றாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவன் S. தனசீலன் கைத்தறி இளவரசன் மற்றும் மாணவி மைவிழிக்கு கைத்தறி இளவரசி என்ற பட்டமும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர். தொழில்நுட்ப உதவியாளர் பரமசிவம் அவர்கள் படக்காட்சி மூலம் கைத்தறியின் வரலாறு, வகைகள் மற்றும் பயன்பாட்டை பற்றி விளக்கினார். பிற்பகல் 2 மணி அளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா CBSE பள்ளியில் கைத்தறி விழிப்புணர்வு நடைபெற்றது. அறங்காவலர் ஜோதிலிங்கம் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனது உரையில் மத்திய மாநில அரசுகள் சமீப காலமாக எடுத்துவரும் நடவடிக்கைகள் கைத்தறி நெசவாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகக் கூறினார். மேலும் 1905 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் நினைவாக ஒன்பதாம் ஆண்டு கைத்தறி தினத்தின் வரலாறு பற்றி கூறினார். ஆடை வடிவமைப்பு துறை தலைவி அவர்களால் கைத்தறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பு துறையின் சார்பாக கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது. பள்ளியின் மாணவர்களிடையே ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்பு துறை தலைவர் திருமதி T. ஷாலினி மற்றும் உதவி பேராசிரியர்கள் K. தேன்மொழி, P. அனிதா, R. அக்ஷயா மற்றும் மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.