ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் அம்மாபாளையம் அரசு பள்ளி ஆகியவை இணைந்து நடத்திய பெருந்துறை மண்டல அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
6 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் சதுரங்கம், கேரம், கபடி போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். விழா ஏற்பாடுகளை முதல்வர் முனைவர் ராமன் அவர்களின் வழிகாட்டுதலில் உடற்கல்வி இயக்குனர், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.