ஈரோடு வடக்கு மாவட்ட கழகம் சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு தேவையான உபகரணங்களை பவானி வட்டத்திற்குட்பட்ட 80 பள்ளிகளுக்கு
மாவட்ட கழகச் செயலாளர் என்.நல்லசிவம் அவர்களின் தலைமையில் மாண்புமிகு வீட்டு வசதித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வு ஒன்றிய கழக செயலாளர் கே.பி.துரைராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் என்.சத்தியமூர்த்தி அவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மலர்விஜயன் அவர்கள், ஓடத்துறை ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன் அவர்கள், சலங்கபாளையம் பேரூராட்சி செயலாளர் பழனிச்சாமி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.