நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள தெற்குபாளையம் கீழ்புதூர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு வீரமாத்தி அம்மன், கருப்பனார், முருகன், கன்னிமார் ஆகிய சுவாமிகள் அடங்கிய திருக்கோவில்களின் ஆடி மாதம் பொங்கல் திருவிழா நடைபெற்றது.
இதில் முதல் நிகழ்வாக காவேரி ஆற்றங்கரையில் இருந்து சுவாமி சக்தி அழைத்து பக்தர்கள் தீர்த்த குடம் சுமந்து கோவிலுக்கு சென்றடைந்தனர்.
தொடர்ந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களால் சுவாமிக்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், நெய் மற்றும் வாசனை திரவிய பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கருப்பனார் பூஜை நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலந்து கொண்ட மக்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.