T.N.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கணக்கம்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்கள்
K.S. தர்ஷன் (கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சேந்தமங்கலம், நாமக்கல்) மற்றும் P. தயானந்த் (கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், வீரபாண்டி) ஆகியோர் கால்நடை மருத்துவப் படிப்பிற்காக தேர்வாகியுள்ளார்கள்.
அவர்களுக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் TN பாளையம் ஒன்றிய திமுக சார்பில், கல்வி ஊக்கத்தொகையாக T.N.பாளையம் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. எம். சிவபாலன் அவர்கள் ரூ. 20,000 நிதயுதவி வழங்கினார்.
இதில், முன்னால் சட்டமன்ற உறுப்பினர் திரு.T.K. சுப்பிரமணியம் அவர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் திரு. வெங்கடேஸ்வரன் அவர்கள், மாவட்ட பிரதிநிதி திரு. திருமுருகன் அவர்கள், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.