இந்த இயக்கம் 1972 வருடம் மறந்தும் மறையாமல் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும். எம்ஜிஆர் ஆல் தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட ஆறு மாதத்திலேயே திண்டுக்கல்லில் இடைத்தேர்தல் வந்தது. முதல் வேட்பாளராக மாய தேவர் போட்டியிட்டு சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன் பிறகு தான் டெல்லி பார்வையை அதிமுக மீது விழுந்தது. 1977 நாள் முதல் முறையாக சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டேன். வெற்றி பெற்றேன். உங்களால்தான் நான் மேடையில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை வளர்த்தவர் நீங்கள். 1980 ஆம் வருடம் நமது பொன்மனச் செம்மல் முதன்முதலாக குழந்தைகளுக்கு சத்துணவு கொண்டு வந்தார். அதற்கு மறைந்த முதல்வர் கருணாநிதி சட்டசபையில் நிதி எங்கே இருக்குது என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த நம் பொன்மதச் செம்மல் பசியின் கொடுமை நான் அறிவேன். மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்துள்ளேன். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாடக்கூடாது. தூண்டேந்தி பிச்சை எடுத்தாவது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.
அதற்குப் பிறகு ஏராளமான திட்டங்கள் மக்களுக்காக கொண்டு வந்தார்கள். முதல் முதலில் ஓஐபி திட்டத்தை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் நமது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான். கைத்தறி நெசவாளர்கள் வாடுவதை கண்டார். அப்போதுதான் பொங்கலுக்கு தீபாவளிக்கும் ஏழை தாய்மார்களுக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கினார். இப்பொழுது இங்குள்ள கூட்டத்தை பார்த்தால் பொதுக்கூட்டம் அல்ல மாநாடு போல இருக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும் என்று கூறினார். பத்தாண்டுகளில் 5, 32,000 மணி கணினிகள் மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. போக்குவரத்து இடையூறுகள் அதிகமாக இல்லாமல் இருக்கவும் 2001 இல் முதலமைச்சர் அம்மா மிதிவண்டிகளை வழங்கினார். உத்தரப் பிரதேஷ் முதல்வர் அகிலேஷ் யாதோ இரண்டு ஆண்டுகள் மணிக்கணினி வழங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கொடுக்க முடியவில்லை. நமது ஆட்சியில் தாய்மார்களுக்கு ஆட்டுக்குட்டி கோழிக்குஞ்சு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய்க்கு இட்லி என்று அம்மா உணவகம் வழங்கப்பட்டது. பிளஸ் டூ படித்த பெண்களுக்கு டிகிரி படித்த பெண்ணுக்கும் திருமண உதவித்தொகை 50000 வழங்கினார். அந்த திட்டத்தை திமுக முழுகிவிட்டது. தமிழக முழுவதும் கலைஞர் உரிமைத்தொகை சரியாக குடும்பத் தலைவிக்கு போய் சேரவில்லை. அவிநாசி அத்திக்கடவு திட்டம் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டமும் அந்தியூர் வரட்டு பள்ளி திட்டமும் விவசாயிகள் மனதில் வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடைமுறைப்படுத்தினார். தனியார் பள்ளியை மிஞ்சு வகையில் வருடத்திற்கு நான்கு வண்ண சீருடை சத்துணவு கலவை சாதம் வழங்கினார். நமது திட்டத்தை உட்கார்ந்து காப்பி அடித்து திமுக அரசு காலை சிற்றுண்டி வழங்கி வருகிறது. நமது ஆட்சியில் ஒன்பது ரூபாய் இருந்த செங்கல் தற்போது 11 ரூபாய் ஆகிவிட்டது. கட்டுமான பொருட்கள் அனைத்தும் விலை ஏறிவிட்டது. இரண்டு வருடத்தில் மின்சாரம் வரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வரி உயர்ந்து விட்டது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கும் கெட்டுவிட்டது.
நாங்குநேரியில் தீண்டாமைக் கொள்கை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டு பெரும் கொடுமையாக பார்க்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயலில் கிராமத்தில் குடிக்கும் தண்ணீரில் மனிதக் கழிவை கலந்து விட்டார்கள். குற்றவாளிகளை இன்னும் கைது செய்த படவில்லை. ஒருமுறை அன்னை தெரசா மறைந்த முதல்வர் அம்மா அவர்களை பார்க்க வந்தார். உலகமே வியக்கும் வண்ணம் தொட்டில் திட்டம் சிறப்பாக செயல்படுத்தி உள்ளீர்கள் நீங்கள் தமிழகத்துக்கு கிடைத்த பரிசு என்று பாராட்டினார். ஆந்திராவில் நக்சலைட்டுகள் கொடூரம் அசாம் மாநிலத்தில் உள்பா தீவிரவாதிகள் கொடூரம் அப்போது மத்திய உள்துறை அமைச்சர் பாண்டிச்சேரியில் அனைத்துமுதலமைச்சர் மாநாட்டை நடத்தினார். தமிழகத்தில் போல் சட்ட ஒழுங்கு இந்தியாவில் எங்கும் இல்லை என்று பாராட்டினார். இதேபோல் இப்பொழுதுகாவேரி பிரச்சனை இவர்கள் கூட்டணி ஆட்சி தான் இத்தனை நாளாக நடக்கிறது. நதிநீர் ஆணையம் உத்தரவிட்ட பிறகு கர்நாடக தண்ணீர் வழங்க மறுக்கிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டது. இதற்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு தான் தர வேண்டும். 1975-ல் கர்நாடகாவில் காவேரி பிரச்சனை நடக்கும் பொழுது அன்றைய முதல்வர் குண்டு ராவ் நமது முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களை பேச வருமாறு அழைத்தார். நமது முதலமைச்சர் வீட்டுக்கு சென்ற போது குண்டு ராவின் துணைவியார் தண்ணீர் கொண்டு வந்து சாப்பிடுங்கள் என்றார். அதற்கு நாம் முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம் ஜி ஆர் தண்ணீர் குடிக்க மாட்டேன் எனது மக்களுக்கு தண்ணீர் வழங்கினால் தான் தண்ணீர் குடிப்பேன் என்று கூறினார். எம்ஜிஆர் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இனி ஒரு முதல்வர் அவரைப் போல் பார்க்க முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று கூறினார்.