கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிக்கு உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் திரு. N. R. நாகராஜ் அவர்கள் தலைமையேற்றார். அவருடன் நகராட்சி ஆணையாளர் T. சசிகலா, துப்புரவு அலுவலர் சோழராஜ், துப்புரவு ஆய்வாளர் நிரூபன் சக்கரவர்த்தி மற்றும் மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர்.
அப்போது டெங்கு கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் அனைத்து வார்டுகளிலும் டெங்கு கொசு புழு உருவாகும் இடங்களான தண்ணீர் தொட்டிகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், ஆட்டுக்கல், சிமெண்ட் தொட்டிகள், பிளாஸ்டிக் கப்புகள், தேவையற்ற உடைந்த பொருட்கள் ஆகியவற்றை தண்ணீர் தேங்காமல் அவற்றை அப்புறப்படுத்தியும், மருந்துகள் ஊற்றியும் டெங்கு கொசு புழுக்களை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு டெங்கு கொசு புழு உருவாகும் இடங்களை காண்பித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களே தங்களுடைய வீடுகளில் கொசு புழு இல்லா வீடாக மாற்றி டெங்கு வராமல் பார்த்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.