ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியது:- இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருந்த இந்து முன்னணி தமிழகத்தில் வலுவாக காலூன்றி விட்டது. வீதிக்கு வீதி விநாயகர் சிலையை வைத்து தற்போது பொதுமக்கள் வழிபாடு செய்கிறார்கள். இதற்கு காரணம் இந்து முன்னணி தொண்டர்கள்தான். கொடிவேரியில் மாவட்ட துணைத் தலைவர் செல்வராஜ் என்பவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கு பதிவு செய்து உள்ளது. அவருக்கு வயது 64 ஆகிறது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுவிட்டது, என்று கூறினார்.
நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் கா குருசாமி முன்னிலையில், மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சி.கிருஷ்ணசாமி வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மூர்த்தி நன்றி உரையாற்றினார். கிஷோர் குமார் மாநில பொதுச் செயலாளர், சண்முகம் மாநிலச் செயலாளர், முரளி வழக்கறிஞர், ஸ்ரீதர் மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர், பாலமுருகன் மேற்கு மாவட்ட செயலாளர், அன்னையர் முன்னணி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், கார்த்திக், தமிழ்ச்செல்வன், மணிகண்ட பிரபு மற்றும் இந்து முன்னணியின் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.