கோபிசெட்டிபாளையம் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தினமும் 18 டன் திடக்கழிவுகள் சேகரம் செய்யப்படுகிறது. இதில் சுமார் 11 டன் மக்கும் கழிவுகளை இயந்திரத்தில் அரைத்து, தொட்டிகளில் நிரப்பி 40 நாட்கள் மக்கி உரமான பிறகு குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதிக ஈரப்பதம் உள்ள 3 டன் உணவு கழிவுகள், பழ கழிவுகள் மற்றும் கோழி கழிவுகளை உயிரி எரிவாயு கூடம் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு உயிரி எரிவாயு கூட்டத்தில் உள்ள மோட்டார்கள் மற்றும் இயந்திரங்கள் இந்த மின்சாரத்தைக் கொண்டு இயக்கப்படுகிறது. மக்காத மறுசுழற்சிக்கு பயன்படக்கூடிய விற்பனை செய்ய உகந்த கழிவுகளை தூய்மை பணியாளர்கள் விற்று பணப்பயன் அடைகின்றனர். மக்காத மறு சுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 14 .67 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரையிலும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் இருந்து 3357 டன் பிளாஸ்டிக் கழிவுகள் மாற்று எரிபொருளுக்காக சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் 14.67 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது...
September 14, 2023
0