கூட்டணி சேராமல் தன்னிச்சையாக தேர்தலை சந்திக்க திமுகவுக்கு திறமை இல்லை. சனாதத்தை ஒழிப்போம் என்று மேடைக்கு மேடை உதயநிதி ஸ்டாலின் தீக்க தலைவர் வீரமணி பேசி வருகிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தை நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார். முதல் சட்டமாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை 60 ஆண்டு காலமாக காங்கிரஸோ திமுகவோ கொண்டுவர முடியவில்லை. சொந்த தொழில் செய்பவர்கள் அனைத்து இந்துக்களுக்கு வகையில் விஸ்வகர்மா என்ற திட்டத்தை பாரத பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இதை வீரமணி திருமாவளவன் போன்றவர்கள் திட்டத்தை விமர்சனம் செய்கிறார்கள். குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்து விட்டதாக குற்றம் சுமத்துகிறார்கள். சுயதொழில் செய்பவர்களுக்காக இத்திட்டத்தை கொண்டு வரப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக சிறைச்சாலையில் இருந்து வருகிறார்.
ஆர் எஸ் மணி என்ற ஆன்மீக சொற்பொழிவு வாலனை திமுக அரசு கைது செய்து உள்ளே வைத்துள்ளது. ஒரு உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்படும். அனைத்து இந்துக்களாலும் போற்றப்படும் ஒரே தெய்வம் விநாயகர் என்றுமே அவர் சூப்பர் ஸ்டார் தான் அடுத்த விநாயகர் சதுர்த்தி அன்று திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இருக்காது மற்றும் புதிதாக விநாயகர் சிலை வைக்கக் கூடாது என்று திமுக அரசாங்கம் கூறுகிறது. புதிது புதிதாக சர்ச்சுகள் கட்டலாம் மசூதிகள் கட்டலாம் விநாயகர் புதிதாக வைக்கக் கூடாதா அதை சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம். என்றைக்கும் இந்து மதத்தை அழிக்க முடியாது அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அறிஞர் அண்ணா திக்காவிலிருந்து பிரிந்து வந்து திமுகவை தொடங்கினார். அப்பொழுது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறினார். எம்ஜிஆர் தாய் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று வழிபட்டார். அவர் ஒரு முறை சொன்னபோது முஸ்லிம்க்காக ஒரு கட்சி இருக்கும்போது கிறிஸ்தவர்களுக்காக ஒரு கட்சி இருக்கும்போது ஏன் இந்துக்களுக்காக ஒரு கட்சி இருக்கக் கூடாது என்று கேட்டார். உங்கள் கட்சி எம்ஜிஆரின் ரசிகர்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்பொழுதும் இந்துக்களை விமர்சித்தது இல்லை. விநாயகர் வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திமுகவும் அதிமுகவும் தான் நோன்பு கஞ்சி திருமாவளவன் கிறிஸ்துவர்களுக்கு ஜெபக்கூட்டம் நடத்துகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தை திராவிட கட்சிகள் விமர்சிக்கிறார்கள்.
இவ்வாறு பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் அவர்கள் கூறினார். நிகழ்ச்சியில் அருண் ராஜ் மாநில அமைப்பு செயலாளர் கே சி முருகேசன், மாநில செயலாளர் மாநிலத் தலைவர் வி எஸ் கே தமிழ்செல்வன், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஓம்கார் பாலாஜி, கொள்கை பரப்புச் செயலாளர் தடப்பள்ளி மற்றும் அரக்கன் கோட்டை பாசன சங்கத் தலைவர் சுபித்தளபதி நிகழ்ச்சியில் சத்ரபதி சிவாஜி வேடமடைந்து வெள்ளியங்கிரி என்பவரை பாராட்டி சத்திரபதி வெள்ளிங்கிரி என்று பாராட்டுகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்து மக்கள், கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர் கோபி டிஎஸ்பி வி தங்கவேல் மற்றும் காவல் ஆய்வாளர் சண்முகவேல் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.