பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி ரேஸ் போட்டி ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 19.09.2023 நேற்று நடைபெற்றது. போட்டியில் பாரதியார் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட கல்லூரியில் இருந்து மொத்தம் 45 கல்லூரிகள் கலந்து கொண்டனர். ஆண்கள் பிரிவில் 24 கல்லூரிகளும், பெண்கள் பிரிவில் 25 கல்லூரிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியை ஈரோடு சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் அவர்கள் கொடியசைத்து ஓட்டப் போட்டியை துவக்கி வைத்தார். ஓட்டப் போட்டியை அவர்களுடன் வாசவி கல்லூரி முதல்வர், முனைவர் தாமரைக்கண்ணன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் ரமேஷ், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன், மற்றும் மற்ற கல்லூரியில் இருந்து வந்திருந்த உடற்கல்வி இயக்குனர்கள், நடுவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் முடிவில் கல்லூரிகளுக்கான கிராஸ் கண்ட்ரி போட்டியில் பாரதியார் பல்கலைக்கழக ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோயம்புத்தூர் டாக்டர். என். ஜி. பி. கல்லூரி பெற்றது. இரண்டாம் இடத்தை பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜ கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை கோபி கலை அறிவியல் கல்லூரி அணியும், நான்காம் இடத்தை கோவை சி எம்.எஸ். கல்லூரி அணியும் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கோவை நிர்மலா கல்லூரியும், இரண்டாவது இடத்தை கோயம்புத்தூர் பி. எஸ். ஆர். கிருஷ்ணம்மாள் அணியும், மூன்றாம் இடத்தை கோபி கலை அறிவியல் கல்லூரி அணியும், நான்காம் இடத்தை கோவை பாரதியார் பல்கலைக்கழக அணியும் பெற்றனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பவானி துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி அமிர்தவர்ஷினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவர்களுடன் இணைந்து விழாவிற்கு ஸ்ரீ வாசவி கல்லூரி செயலாளர் சதாசிவம் அவர்கள் தலைமை தாங்கினார். முதல்வர் தாமரைக்கண்ணன் அவர்கள் வரவேற்பு உரையாற்றி போட்டியில் பங்கு பெற்ற அனைவரும்
கௌரவித்தார். சிறப்பு அழைப்பாளராக அபிராமி கிட்னி கேர் சென்டர் டாக்டர் டி சரவணன் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். மேலும் சிறப்பு அழைப்பாளராக சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையா அவர்கள் கலந்து கொண்டார். பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் முனைவர் ராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் இப்போட்டியில் முதல் ஆறு இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அனைத்தின் இந்திய பல்கலைக்கழகத்திற்கான போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
இப்போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ வாசவி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ரமேஷ் அவர்கள், மேலும் என்சிசி மாணவர்கள், என் எஸ் எஸ் மாணவர்கள் மற்றும் பேராசிரியர் குழு அனைவரும் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்திருந்தனர்.
இறுதியாக ஸ்ரீ வாசவி கல்லூரி பொருளாதார துறை தலைவர் நாச்சிமுத்து அவர்கள் நன்றி உரை வாசித்தார்.
படத்தில் இருப்பவர்கள் இடமிருந்து உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், சித்தோடு காவல் நிலைய ஆய்வாளர் முருகையன், முதல்வர் தாமரைக்கண்ணன், பவானி துணை கண்காணிப்பாளர் செல்வி அமிர்தவர்ஷினி, கல்லூரி செயலர் சதாசிவம், ஈரோடு கல்யாணி கிட்னி கேர் சென்டர் சரவணன், பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் மற்றும் டாக்டர். என். ஜி. பி. கல்லூரி மாணவர்கள்.