உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர்கள் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்...
September 20, 2023
0
ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ், அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் தலைமை கொண்ட குழுவினர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஓட்டலில் சிக்கன், நூடுல்ஸ் உள்பட பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உணவு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டதில் 12 கிலோ காலாவதியான சிக்கன் பயன் படுத்தப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த 12 கிலோ சிக்கனை உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் பினாயில் ஊற்றி அழித்தனர். இதைத்தொடர்ந்து மற்ற ஓட்டல்களிலும் ஆய்வு செய்யப்படும் என மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தெரிவித்தார்.
Tags