ஆயிர நகர வைசிய திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர் குமார், முன்னிலையில் நடைபெற்றது.
இதில் வருகிற விநாயகர் சதுர்த்தி திருவிழாவிற்கு ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பாக 1008 இடங்களில் விநாயகர் திருமேனி பிரதிஷ்டை செய்யப்படும். எனவும்
இந்து பண்டிகைகளுக்கு மட்டும் மிகுந்த கட்டுப்பாடுகள் விதிப்பது இந்துக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
வருகிற விநாயகர் சதுர்த்தி திருவிழா நடத்துவதற்கு தமிழக அரசு மிகுந்த கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை உடனடியாக தளர்த்தி விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொதுமக்கள் நல்ல முறையில் கொண்டாட தமிழக அரசை கேட்டுக்கொள்ளப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் நிலத்தை மீட்டு 80 அடி சாலையை அமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நக்சல் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், மேலும் சில நக்சல் பயங்கரவாதிகளை ஈரோடு மாநகரில் கைது செய்திருப்பது ஈரோடு மக்களிடையே அச்சத்தையும் அதிர்ச்சியும் ஏற்படுத்துகிறது. மேலும் ஈரோடு மாவட்டம் நக்சல் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் முருகன்,
துணைத்தலைவர்கள் சண்முகம், லோகநாதன், முத்துசாமி,
மாவட்ட செயலாளர்கள் சங்கர், கார்த்தி, வக்கீல் முரளி, கொடுமுடி கார்த்தி, ரமேஷ், பட்டுராஜ், செயற்குழு உறுப்பினர்கள் கவின், விவேக், பழனிவேல், விஜய், சுதீஷ், சபரி, மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.