ஈரோடு ஆனைக்கல் பாளையம் காலனியில் ஒண்டி மதுரை வீரன் கருப்பண்ணசாமி, கன்னிமார், பாம்பாட்டி சித்தர் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா 03.09.23 நேற்று காலை நடந்தது.
முன்னதாக விநாயகர் வழிபாடு பஞ்சகவ்ய பூஜை ,வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும், காவேரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வர நிகழ்ச்சியும் நடந்தது. இவ்விழாவையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி அவர்கள் மற்றும் 46 புதூர் பஞ்சாயத்து தலைவர் பிரகாஷ், பஞ்சாயத்து கவுன்சிலர் அருள்மணி, விஸ்வநாதன், யூனியன் கவுன்சிலர் பேபி குமார், மகேந்திரன் மற்றும் பிரகாஷ் என ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.