கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள
கலிங்கியம் ஊராட்சி, தங்கமலை கரடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கிராம மக்கள் சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று இரவு சிலையை கரைப்பதற்காக ஏராளமானோர் வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் தங்கமலை கரடு அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு சென்றனர்.
அப்போது எதிர்பாராத விதமாக தேனீக்கள் தாக்கியதில் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அச்செய்தியை அறிந்த கோபி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சரும் KA செங்கோட்டையன் MLA அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.