Type Here to Get Search Results !

ஆதரவற்ற பிணங்களுக்கு தங்களது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்த காவலர்கள்...

கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (67) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். சிகிச்சைக்காக சேர்ந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி 12 ம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். அதேபோல கோபிசெட்டிபாளையம், புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுசீலா என்பவர் கடந்த 4ம் தேதி தீராத வயிற்று வலி காரணமாக கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரது உடல்களும் கோபி அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்களில் வைக்கப்பட்டிருந்தது. 

இவர்களது பிரேதத்தை கேட்டு  யாரும் வராத நிலையில் கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் அவரது சொந்த செலவில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்தனர். 

அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து செல்வராஜ் மற்றும் சுசீலா ஆகியோர் இருவரது உடல்களையும் பெற்று கரட்டூர் பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக கொண்டு சென்றனர். மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இருவரின் பிரேதத்தையும் கோபி காவலர்கள் ஜெகநாதன் மற்றும் கேசவன் ஆகியோர் வேனில் இருந்து இறக்கி, இறந்தவர்களின் குடும்பத்தார் இருந்திருந்தால் என்னென்ன இறுதிச் சடங்கு செய்வார்களோ அதுபோன்று காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர், இருவரின் பிரேதங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய  பின்பு, இறுதிச் சடங்கு செய்து நல்லடக்கம் செய்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.