மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க,
அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் திரு AG.வெங்கடாசலம் MLA அவர்கள்,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி கோபி வடக்கு ஒன்றியம் கடுக்காம்பாளையம் ஊராட்சியில், 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த கால்நடை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுப் பணியின் போது மருத்துவமனைக்கு எத்தனை கால்நடைகள் தினந்தோறும் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறது, எந்தெந்த பகுதிகளில் இருந்து கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு வரப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். இதில் போதிய அளவில் மருத்துவ பொருட்கள் இருப்பு உள்ளதா என்பதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுப் பணியின் போது கோபி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ரவீந்திரன் அவர்கள், ஈரோடு வடக்கு மாவட்ட சிறுபான்மை இன அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன், கிளைக் கழக செயலாளர் சாமிநாதன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.