Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது...

கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதியில் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. எ. செங்கோட்டையன் தலைமையில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். பின்னர் செங்கோட்டையன் பேசியதாவது கோபிசெட்டிபாளையம் நகரத்தில் 30 வார்டு உள்ளது, பூத்துகள் உள்ளது. ஒரு பூத்துக்கு 19 பேர் நியமிக்கப்பட வேண்டும். இந்த இயக்கம் மறைந்த முன்னாள் முதல்வர் பொன்மனச் செம்மல் எம். ஜி. ஆர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அவர் ஆரம்பித்த உடனே சில நாட்களில் தேர்தல் வந்தது. திண்டுக்கல்லில் மாய தேவர் என்ற நபர் சுமார் 2 லட்சத்து 35 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்தியாவிலேயே திரும்பிப் பார்க்க வைத்தே தேர்தல் அது நமது இயக்கத்தில் தான் ஒரு மாநில கட்சியில் சுமார் 2 கோடி பேர் இணைந்துள்ளனர். மாநில கட்சியினில் இது போல் இல்லைை. 1988 89 இல் நமது இதய தெய்வம் பொன்மனச் செம்மல் மறந்துவிட்டார். அவருக்கு பிறகு புரட்சித்தலைவி அம்மா கட்சியை வழி நடத்தினார். சுமார் பத்து ஆண்டுகளில் 5 கோடியே 35 லட்சம் மாணவ மாணவியர்களுக்கு மணி கணினி வழங்கப்பட்டது. 

இதை பார்த்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் ஆயோத் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கினார். இதைத் தொடர்ந்து ஐந்தாண்டுகள் கூட அவர் நாள் வழங்க முடியவில்லை. கோபி நகராட்சியில் கழிவுநீர் அகற்ற கீரிப்பள்ளத்தில் குழி தோண்டி உள்ளார்கள். நகரத்துக்கு வெளியே தோண்ட வேண்டும் என்று தவிர நகரத்துக்குள் தோண்ட கூடாது. இப்போது கீரிப்பள்ளத்தை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாக்கடை நீர் வந்துவிட்டது. அடுத்து கவுந்தப்பாடியில் சுங்க பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை அனைத்திந்திய அண்ணா, திமுக, மக்களை திரட்டி போராட்டம் நடத்தும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு நாடு ஒரு தேர்தல் என்றாலும், சட்டசபை தேர்தலாக இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், அதிமுக தைரியமாக எதிர்கொள்ளும் என பேசுகையில் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்பி சத்தியபாமா, கோபி நகர அதிமுக செயலாளர் நகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தி.பிரநியோ கணேஷ், லக்கம்பட்டி பேரூராட்சி தலைவர் அன்னக்கொடி ரவிச்சந்திரன், நம்பியூர் ஒன்றிய செயலாளரும் ஈஸ்வரமூர்த்தி, சுப்பிரமணியம்  மற்றும் மாணவரணி, செயலாளர் கலிங்கியம் அருள் ராமச்சந்திரா, பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி, கவுன்சிலர் தனசேகரன், தகவல் தொழில் நுட்பச் செயலாளர் முத்து ரமணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.