ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நாம் தமிழர் கட்சியினர் கோபி, பவானி, அந்தியூர் மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு சந்திப்பின் போது கூறியதாவது,
"பாராளுமன்ற தேர்தல் பணிக்களுக்காக எங்களது நிர்வாகிகளை சந்தித்து உற்சாகபடுத்தி வருகிறேன். தற்போது எங்களது சுற்றுபணயமானது 50 சதவிகிதம் நிறைவடைந்துள்ளது, இன்னும் கோவை,விழுப்புரம்,கடலூர்,வேலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்று பயனம் மேற்கொண்டு அக்டோபர் மாதம் நிறைவு செய்யவுள்ளேன்,
மத்திய அரசு வீட்டு உபயோகப் சிலிண்டருக்கு ரூ.200 குறைத்துள்ளது.
எந்த பொருட்களின் விலையையும் மத்திய அரசால் குறைக்க முடியும். தற்போது அரிசி, பருப்பு, எண்ணெய், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மக்கள் நலன் சார்ந்துதான் எந்த திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். அதே போல வளர்ச்சி நோக்கி தான் திட்டங்களும் செல்ல வேண்டும். தற்போது உள்ள இந்த மத்திய அரசை கொடுங்கோன்மை எனத்தான் சொல்ல வேண்டும், தன்னலமற்ற சர்வதிகாரி என சொன்னால் பெருந்தலைவர் காமராஜ் போன்றவர்கள் தான் அவர்கள் மக்களைப் பற்றி தான் சிந்தித்தார்கள். ஆனால் மத்திய அரசோ தேர்தலை நோக்கித்தான் நகர்கிறது. இவர்கள் மக்களை ஏமாற்றுவதே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஏதோ ஒரு தொகுதியில் நின்று தேர்தலை சந்திக்க தயார். என்னைவிட பிஜேபினர் ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா, நாங்கள் 40 இடங்களிலும் போட்டியிட உள்ளோம். யாருடனும் கூட்டணி அமைக்காது, தனித்து போட்டியிட உள்ளோம்.
பிஜேபியை பொறுத்தவரை எடப்பாடியை நம்பித்தான் சீட்டு வாங்க முடியும். எத்தனை சீட்டு பெற்றாலும் பிஜேபியால் ஜெயிக்க முடியாது. தமிழகத்தில் தனி மனித வருமானம் அதிகரித்து உள்ளது என கூறுகின்றனர் எதற்கு இத்தனை இலவசங்கள்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் கலை அடையாளமாக உள்ளார். சந்திராயனில் காற்று தண்ணீர் இருக்கின்றதா என ஆய்வு செய்கின்றனர். ஆனால் பூமியில் காற்று தண்ணீர் இருக்கிறதா என்பதை முதலில் ஆய்வு செய்ய வேண்டும். சந்திராயனில் பிரதமர் மோடி விண்கலம் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என பெயரிட்டுள்ளதை பற்றி கேட்டதற்கு வேண்டுமென்றால் அங்கு பலகை கூட வைக்கலாம். ராமர் கோயில் கூட கட்டலாம், மதுரையில் ரயில்பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் இறந்தார்கள். இதற்கு ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று உரையை நிறைவு செய்தார்.