Type Here to Get Search Results !

ஈரோட்டில் கறிக்கடைகளில் ஆய்வு - பழைய இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது...

தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புதுறை ஆணையகம் அனைத்து கறிக்கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பித்திருந்தது. அது சமயம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரிலும், மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தலின் பேரிலும் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடைபெற்ற வருகிறது. ஈரோடு சுற்று வட்டார பகுதிகளில் நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், அருண்குமார் ஆகியோர் 15 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது சுமார் 45 கிலோ பழைய இறைச்சி வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக கடையின் உரிமையாளருக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 55 ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்ட நியமன அலுவலர் டாக்டர். தங்கவிக்னேஷ் அவர்கள் மாவட்டம் முழுவதும் இந்த ஆய்வு தொடரும் என்றும் உணவு பொருட்கள் குறித்த புகார்களுக்கு Whatsapp No 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.