முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாம் ஆண்டு சாதனை விளக்க திண்ணைப் பிரச்சாரம் மற்றும் இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்ச்சியை நடத்தினர். ஈரோடு வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் 10.09.2023 அன்று பவானி தெற்கு ஒன்றிய கவுந்தப்பாடி ஊராட்சி தென்காட்டுபாளையம் காலனி, காந்திநகர், ஆகிய பகுதியில்
மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள்
மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம் அவர்களின் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஒன்றிய கழக துணைச் செயலாளர் என்.சத்தியமூர்த்தி, மாவட்ட துணை அமைப்பாளர்கள் கார்த்திகேயன், வைத்தீஸ்வரன், சன் சுரேஷ், வினோத்குமார், பிரகாஷ், மற்றும் மாவட்ட ஒன்றிய ஊராட்சிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.