ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கடத்தூர் போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திடீரென மேற்கொண்டார். அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் மரக்கன்றுகளை நட்டார்.
அப்பொழுது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கோபி போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேல், கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை பாண்டியன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.