ஈரோடு வடக்கு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம், குன்றி, குத்தியாலத்தூர் மற்றும் கூத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மற்றும் இதர மக்களை ஒருங்கிணைத்து சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பயணாளிகளுக்கு
கழக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு ஆ.ராசா அவர்கள் அரசு நலத்திட்டங்களை வழங்கினார். இதில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் அவர்கள் மற்றும் அனைத்து பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.