ஈரோடு மாமரத்துபாளையத்திலுள்ள சக்தி சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் சுமார் 200 சிறப்பு குழந்தைகள் பயிற்சி பெற்று வருகின்றனர். குழந்தைகளின் மனமகிழ்ச்சிக்காகவும் மற்றும் இடமாற்றத்தை புரிந்து கொள்ளுதல் ஊக்கப்படுத்துவதற்காக அவர்களின் பெற்றோர்களுடன் இன்பச்சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெருந்துறைக்கு அருகில் உள்ள "சில்-அவுட்" தீம்பார்க்கிற்கு குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டனர். அன்றைய நாள் முழுவதும் குழந்தைகள் தங்கள் பொழுதினை மகிழ்ச்சியாகக் கழித்தனர். அங்கு பலவகையான தண்ணீர் விளையாட்டுகளிலும், தண்ணீர் அல்லாத தூரி, சர்க்கல், கொலம்பஸ் டிரேகன், ஏரோபிளேன், ராட்டினம் போன்றவற்றிலும் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடினர். குழந்தைகளுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். அனைவருக்கும் மாலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கப்பட்டது. சுமார் 5.30 மணியளவில் பள்ளிக்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்தது.
சக்தி மறுவாழ்வு மையத்தில் பயிற்சி பெறும் சிறப்பு குழந்தைகள் இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
September 02, 2023
0
Tags