ஈரோடு சேனாதிபதிபாளையத்தில் உள்ள தி இந்தியன் பப்ளிக் பள்ளியில்(சிபிஎஸ்இ மற்றும் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல்) பல்கலைக்கழகங்களின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளியின் முதல்வர்கள் அதுல் ருந்தானா, ஆஷிஸ் பட்நாகர் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த கண்காட்சியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், அமிர்தா பல்கலைக்கழகம், விஎன்எல் நிறுவனங்கள், பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்கள், ஷிவ் நாடார் பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம் உட்பட 26க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் கலந்து கொண்டு அரங்குகள் அமைத்திருந்தன. இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான சேர்க்கை செயல்முறை, கட்டணங்கள், வசதிகள், வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு, கல்வி உதவித்தொகை, நுழைவு தேர்வு உள்ளிட்டவை குறித்து மாணவ-மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர்.
தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் பல்கலைக்கழக கண்காட்சி...
September 02, 2023
0
Tags