Type Here to Get Search Results !

ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி...

2023   தேசிய கண்தான விழிப்புணர்வு நாளையொட்டி ஈரோடு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பரண்டு ஜவகர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். மருத்துவமனை அருகே இருந்து புறப்பட்ட இந்த பேரணி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. ஈரோடு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஜி.ஜவகர்,
 இந்நிகழ்ச்சியில் பேசும்போது, "இந்தியா போன்ற
வளரும் நாடுகளில் பார்வைத்திறனின்மை என்பது மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சினைகளுள் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டில், கண் தானம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்கவும் மற்றும் அதிகரிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபரும், தங்களது கண்களை தானம் செய்வதற்கு, உறுதிமொழி வழங்க முன்வர வேண்டும். இதன் காரணமாக இம்மாநிலத்தில் “100% கண் தானமளிப்பவர்கள்" உள்ள மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தை அறிவிக்க இயலும்,"
என்று கூறினார். இதில் கண் மருத்துவர்கள், பணியாளர்கள், வேளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.