பெருந்துறை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் நசியனூர் முதல் விஜயமங்கலம் வரை உள்ள பகுதிகளில் காஞ்சிக்கோவில் ரோடு பிரிவு, துடுப்பதி ரோடு பிரிவு, பெத்தாம்பாளையம் ரோடு பிரிவு, விஜயமங்கலம் ரோடு பிரிவு, நசியனூர் ரோடு பிரிவு ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து நடக்கின்றன. எனவே அங்கு மேம் பாலங்கள் அமைக்கக்கோரி, பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக் கட்டளை சார்பில், பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் பெருந்துறை பகுதியில் காஞ்சிக்கோவில் பிரிவு மற்றும் துடுப்பதி பிரிவு ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்ட மத்திய அரசு ரூ.92 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. மேம்பாலம் அமைக்க பரிந்துரை செய்த பா.ஜ.க.மாநில தலைவர் அண்ணாமலைக்கு பெருந்துறை பொதுமக்கள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் பெருந்துறை பாஜகவினர் நிர்வாகிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
15 வருடமாக எத்தனையோ அரசியல்வாதிகளையும் பெருந்துறை தொகுதி மக்கள் தங்களுடைய இந்த குறையை சொல்லி கேட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. அண்ணாமலை அவர்களிடம் சொல்லி ஒரே மாதத்தில் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பெருந்துறை பாதுகாப்புக் குழுவும் மற்றும் பெருந்துறை பொதுமக்களும் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.இந்நிகழ்ச்சியில் பெருந்துறை பாதுகாப்பு குழுவின் தலைவர் செந்தில் முருகன் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் திரு. ஏ. பி. முருகானந்தம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் திரு. வி. சி. வேந்தானந்தம் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. ராயல் கே. சரவணன் , பெருந்துறை நகரத் தலைவர் S. பூர்ண சந்திரன், பெருந்துறை பாஜகவினர் மற்றும் பெருந்துறை பொதுமக்கள் மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.