கோபிசெட்டிபாளையம் நகராட்சி பகுதிகளில், திருப்பூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் டாக்டர்.இளங்கோவன் அவர்கள் பல்வேறு திட்ட பணிகளையும், திடக்கழிவு மேலாண்மைப் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நுண்உர கூட செயலாக்கம் மைய பணிகளையும், வளமீட்பு மைய பணிகளையும், உயிரி சுரங்க முறை மற்றும் உயிரி எரிவாயு கூட பணிகளை ஆய்வு செய்தார். புதிய தினசரி சந்தை வளாகம் கட்டுமான பணிகளையும், மொடச்சூர் வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகளையும், அறிவு சார் மையம் கட்டுமான பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார். புதிய தார் சாலை அமைத்துள்ள இடங்களான சாய் அபிராமி நகர், அழகு நகர், ராம் நகர் மற்றும் அப்துல்கலாம் நகர் ஆகிய இடங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, நகர்மன்ற தலைவர் திரு.என்.ஆர் நாகராஜ், நகராட்சி ஆணையாளர் திருமதி.சசிகலா, பொறியாளர் திரு.சிவக்குமார், துப்புரவு அலுவலர் திரு.சோழராஜ், துப்புரவு ஆய்வாளர்கள் திரு.சௌந்தரராஜன், திரு.நிருபன் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர். திடக்கழிவு மேலாண்மை பணி சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு பாராட்டும் தெரிவித்தார். திடக்கழிவு மேலாண்மையில் நூறு சதவீதம் அறிவியல் முறைப்படி செயலாக்கம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, அதற்கு தேவையானவற்றிற்கு செயல்திட்டம் மற்றும் மதிப்பீடு தயாரித்து அனுப்பி வைக்க அறிவுறுத்தியுள்ளார்.