விநாயகர்சதுர்த்தி விழா அடுத்த வாரம் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், ஈரோடு
நசியனூர் - சாலையில் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பு, விற்பனையகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்க, மாவட்ட முன்னாள் தலைவர் எம். சி. வெங்கடாசலம் கூறியதாவது:
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத தண்ணீரில் கரையும் வகையில் களிமண், குச்சி கிழங்கு மாவினால் விநாயகர் சிலை செய்கிறோம். இங்கு, 60 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் உள்ளன. மேலும் ஒன்பது அடி முதல் அரை அடி வரை இங்கு பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகள் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
சிலை செய்ய தேவையான களிமண் கிடைப்பது அரிதாக உள்ளது.
மூல பொருட்கள் விலை அதிகரிப்பு,தொழிலாளர் கூலி அதிகரிப்பு என பல காரணங்கள். இருந்தாலும், கட்டுப்பாடியாகும் விலையில் சிலை விற்கப்படுகிறது. மேலும் இங்கிருந்து பூம்புகார் காதிராப் ஆகிய நிறுவனங்களுக்கு சிலை விற்பனை செய்யப்படுகிறது. எதிர்வரும் கார்த்திகை தீபத்தை முன்னிட்டும் இங்கு பல்வேறு வடிவங்களில் வண்ணங்களில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அரசு சிலை செய்யும் தொழிலை ஊக்குவிக்க வேண்டும். மேலும் சிலைகளுக்கு மானியம் வழங்க வேண்டும். இதன் மூலம்
களிமண் சிலை விற்பனை மண்பாண்ட தொழில் தொழிலாளர்கள் புத்துயிர் பெறுவர்கள். அரசு இந்தாண்டும் விநாயகர் சிலைகள் வைத்த கொள்ள அனுமதி வழங்கியிருப்பதால் விற்பனை அதிகரிக்கும் என பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.