ஈரோடு மாவட்டத்தில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் மணி மகுடமாக உதயமாகியுள்ள முதலாம் சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதலாமாண்டு துவக்க விழா துவக்க விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவினை தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்திர்வை துறைகளின் அமைச்சர் மாண்புமிகு எஸ்.முத்துசாமி அவர்கள் குத்து விளக்கேற்றி உரையாற்றுகையில்,
ஈரோடு மாவட்டத்திற்கு முதல் சுயநிதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையினை உருவாக்கி கொடுத்த 1992-ல் தொடங்கப்பட்ட ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவரும், எனது 55 ஆண்டு கால ஆருயிர் நண்பருமான வி. சண்முகன் அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்தார்கள். அவருடைய கடின உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும் 20வது கல்வி நிறுவனமான இம்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையே சாட்சி என்று கூறினார். இத்தகைய சிறப்பு பெற்ற கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பின்னர், மருத்துவக் கல்லூரியில் முதல் வகுப்பு பயிலவிருக்கும் மாணவர்கள் சிறந்த மருத்துவர்களாக உருவாக பல்வேறு வசதிகளைக் கொண்ட கல்லூரி வளாகத்தினை திறந்து வைத்தார். இதில் 25,000 சதுர அடி பரப்பில் குளிருட்டப்பட்ட நூலகம், நல்ல காற்றோட்ட வசதி மற்றும் உணவு வகைகள் அடங்கிய மாணவர்கள் தங்கும் விடுதிகள். உடற்கூறுயியல் ஆய்வு கூடங்கள் மற்றும் 4கே டிஜிட்டல் ஒளியுடன் கூடிய குளிருட்டப்பட்ட விரிவுரையாளர்கள் கூடம் ஆகியன அடங்கும்.
பின்னர் மருத்துவமனையில் ஏற்படத்தப்பட்டுள்ள ஈ.சி.ஜி, எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் பிரிவுகள், வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கென தனித்தனி பிரிவுகள், தடையில்லா ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட பல்வேறு அம்சங்கள், 390 படுக்கை வசதிகளுடன் கூடிய பிரிவுகளை பார்வையிடார்.
முன்னதாக நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புலமுதல்வர் மருத்துவர் ஏ. சந்திரபோஸ் அவர்கள் விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்கள், பெற்றோர்கள் மற்றும் புதிய பாதையினை அடையாளம் கண்டுள்ள மாணவர்களை வரவேற்று பேசினார். இவர்களுடன் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான பேராசிரியர் மருத்துவர் எஸ். கீதாலெட்சுமி கௌரவ விருந்தினராக கலந்துக் கொண்டார். அப்போது அவர் கூறுகையில் கடின உழைப்பின் மூலமாக மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு இடத்தினை தக்க வைத்துக் கொண்ட மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவில் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் திரு.எஸ்.நந்தகுமார் பிரதீப், மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களின் திரு.எஸ்.திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். செயலர் அவர்தம் இதனை தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளர்ச்சிக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய பல்வேறு நிறுவனங்களுக்கு விருதுகளை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் வழங்கி பாராட்டினார். மேலும், ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி. சண்முகன் அவர்களுக்கு நந்தா கல்வி நிறுவனங்களைச் சார்ந்த நிர்வாக அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் நினைவு பரிசினை வழங்கி சிறப்பு செங்தார்கள்.
விழாவின் நிறைவாக நந்தா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ மேற்பார்வையாளர் மருத்துவர் வி. சுந்திரவேல் நன்றியுரை ஆற்றினார்.