ஈரோட்டில் 09.09.2023 அன்று பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஈரோடு ஜேசிஐ எலைட், ஸ்ரீ சிகரம்ஆடைகள் மற்றும் ஈரோடு அகாடமிஇணைந்து நடத்திய தாயமங்கை போட்டி நடைபெற்றது. போட்டியை ஜேசிஐ எலைட் முன்னால் தலைவர் தீபக் தொடங்கி வைத்தார். ஜேசிஐ எலைட் தலைவர் கே. ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் ஏழு வயது முதல் 70 வயது உள்ள பெண்கள் மேற்பட்டோர் பங்கேற்று தாயக்கரம் விளையாடினார்கள். நடுவராக ரம்யா பங்கேற்றார். இதில் நான்கு சுற்றுகள் விளையாடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற முதல் பரிசாகவும், இரண்டு நபர்களுக்கு ரூ. 2000ம் இரண்டாம் பரிசாகவும் ரூ. 1500 இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் ஜேசிஐ எலைட் மகளிர் அணி மண்டல இயக்குனர் டாக்டர் ஷர்மிளா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
ஈரோட்டில் தாயமங்கை போட்டி...
September 11, 2023
0
Tags