ஈரோடு மாமரத்து பாளையத்தில் உள்ள சக்தி மசாலா நிறுவனத்தின் ஓர் அங்கமான சக்திதேவி அறக்கட்டளையின் கீழ் சக்தி மனவளர்ச்சிகுன்றியோர் சிறப்புப்பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது .இம்மையத்தில் சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி சி துரைசாமி மற்றும் டாக்டர் சாந்தி துரைசாமி வழிகாட்டுதலின் படி பயிற்சிக்கு வரும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிறப்பு குழந்தைகளின் தேவைகளை கண்டறிதல் மற்றும் பிரச்சனைகளை கையாளுதல் என்ற தலைப்பில் ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை விஜய் கீயுமன் சர்வீஸ் சிறப்புப் பள்ளியின் முதல்வர் உஷா பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆலோசனை நிகழ்ச்சி மூலம் பெற்றோர்கள் தங்கள் சந்தேகங்களுக்கான தீர்வினை பெற்றனர். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், சிறப்புப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
சக்தி மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப்பள்ளி, சக்தி ஆட்டிசம் சிறப்புப்பள்ளி மற்றும் சக்தி மறுவாழ்வு மையத்தில் பெற்றோர்களுக்கு ஆலோசனை நிகழ்ச்சி...
September 13, 2023
0
Tags