ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்தில் அறுவடை செய்து வரும் நெல்லை விவசாயிகளின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. மத்திய மாநில அரசின் ஊக்க தொகை உயர்வு அறிவிப்பால் 01.09.2023 இன்றுமுதல் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று இரண்டாம் கட்டமாக புதுக்கரைபுதூர், கூகலூர், மேவானி, சவண்டப்பூர் உள்ளிட்ட 7 இடங்களில் புதிதாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இதில் அந்தியூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி ஆகியோர் கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தெரிவிக்கையில்.
பாசன பகுதியில் திறக்கப்பட்டுள்ள
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்கவும். 24 மணி நேரத்திற்குள் அறவை ஆலைகளுக்கு அனுப்ப அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது 29நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் நெல் வரத்தை பொருத்து மேலும் 8 இடங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் கோபி வடக்கு ஒன்றிய செயலாளர் கோரக்காட்டூர் ரவீந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், சவண்டப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், கூகலூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி மாரப்பன், துணைதலைவர் ராஜாராம், ஒன்றிய துணைசெயலாளர் நிர்மலா, மாணவரணி பிரவின், பழனிசாமி, ராமசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.