ஈரோடு வள்ளி தெய்வானை திருமண தகவல் மையம் ஈரோடு பஸ் நிலையம் அருகே செயல்படுகிறது. இதன் கிளைகள் ஈரோடு,சேலம், கரூர் உற்பட பல இடங்களில் செயல்படுகிறது. இந்த திருமண தகவல் நிலையம் சார்பில் சுயம்வரம் நிகழ்ச்சி ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள மல்லிகை அரங்கில் நடந்தது. அப்போது திருமண தடை நீங்குவதற்காக மகா கலா பார்வதி யாகம் மற்றும் பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த சுயம்வரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது வரனை அறிமுகப்படுத்தி பேசினர்.
இது பற்றி திருமண தகவல் நிலைய நிர்வாகிகள் கூறும் போது
எங்களது திருமண தகவல் நிலையம் மூலம் இதுவரை 1000 பேருக்கு திருமணம் நடந்து உள்ளது. 1 லட்சம் பேர் பதிவு செய்து உள்ளனர். அனைத்து சமுதாயத்தினருக்கும் இங்குவரன் பார்த்து கொடுக்கப்படும் என்று கூறினர்.