ஈரோட்டின் என் ஏ சி எச் அங்கீகாரம் பெற்ற முதல் பல துறை மருத்துவமனையான லோட்டஸ் ஆஸ்பிட்டலின் மற்றொரு பிரம்மாண்டமான லோட்டஸ் மகளிர்
மருத்துவம் மற்றும் அதிநவீன அறைகள் நேற்று தொடங்கப் பெற்றது. தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் லோட்டஸ் மகளிர் மருத்துவ பிரிவை துவங்கி வைத்தார். இவ்விழாவில் லோட்டஸ் ஆஸ்பிட்டலின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் .ஈ.கே. சகாதேவன், துணைத் தலைவர் எஸ். குமரன், மகளிர், மகப்பேறு மற்றும் கரு சிகிச்சை நிபுணர் டாக்டர் ஈ.எஸ். உஷா, செயற்கை கருத்தரித்தல் நிபுணர் டாக்டர் ஸ்ருதி ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஈரோட்டின் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஈரோட்டின் முதன்மை மருத்துவர்கள், முன்னணி தொழிலதிபர்கள், ரோட்டரி, அரிமா மற்றும் தொழில்முறை சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
மகளிர் மருத்துவ மையத்தில் சிறப்பு பரிசோதனைகளாக 3டி ஸ்கேன், கருக்குழாய் பரிசோதனை மற்றும் ஹிஸ்டோ சல்பிங் கிராபி பரிசோதனைகள் செய்யப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறைகள் ஐவிஎஃப், இக்ஸி மற்றும் கருப்பைக்குள் விந்து செலுத்துதல், இம்முறையில் உதவுவதற்கு கருமுட்டை, விந்து, கரு ஆகியவற்றை உறைவு தன்மையில் நீண்ட நாள் பாதுகாத்தல் வசதியும் அளிக்கப்படுகிறது. கருமுட்டை மற்றும் விந்து தானம் வழியாக அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி கருவுற உதவி செய்யப்படுகிறது. விந்து பரிசோதனை மற்றும் விந்து குறைபாடுகளுக்கான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.