நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஈரோடு அருகே உள்ள தாண்டாம்பாளையம் செங்குந்தர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட கைத்தறித்துறை சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை யொட்டி நடந்த இந்த இலவச மருத்துவ முகாமை கைத்தறித்துறை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 50 க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மருத்துவம் சர்க்கரை நோய், கண் பரிசோதனை, பல் சிகிச்சை, எலும்பு சிகிச்சை, இதயம் சம்பந்தப்பட்ட நோய், சித்த மருத்துவம் போன்ற பரிசோதனைகளை செய்தனர். இந்த முகாமில் தாண்டாம்பாளையம் மற்றும் சிவகிரி பகுதியை சேர்ந்த 20 சொசைட்டி களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் வகையில் தண்டம்பாளையம் பகுதியில் உள்ள அன்னை சத்யா மற்றும் திருவள்ளுவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் வளாகத்தில் மரம் நடும் விழா நடந்தது . மேலும் தறி உபகரணங்கள் கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ் தாண்டம்பாளையம் பகுதி யை 40 நெசவாளர்களுக்கு அச்சு, ஒடி மற்றும் ரூ. ஒரு லட்சத்து 20,000 மதிப்புள்ள கைத்தறி உபகரணங்கள் வழங்கப்பட்டன.