வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் நிர்வாகத்தின் சார்பில் கடந்த 02.09.2023 ஆம் தேதியன்று, வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் 28 பள்ளிகள் கலந்து கொண்ட மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
"விஞ்ஞான்" (vigyaan) என்று அழைக்கப்பட்ட இந்த அறிவியல் கண்காட்சியில் ஈரோடு வேலம்மாள் பள்ளியின் சார்பாக சிறந்த மாணவர்கள் போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் Astro Avengers என்ற பிரிவில் மூன்றாம் வகுப்பு பயிலும் கோ. சக்சைன் என்ற மாணவன் சிறப்பு பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் இவரின் சந்தரியான் மூணு செயல்முறை மற்றும் விளக்கம் அனைவரையும் கவரும்படி அமைந்திருந்தது. மேலும் கடந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் இதே மாணவர் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.