Type Here to Get Search Results !

மருதுவம்சம் என்ற பெயரில் புதிய இயக்கம் - பவானியில் தொடங்கப்பட்டது...

ஈரோடு மாவட்டம்,  பவானி அருகிலுள்ள குதிரைகல் மேடு பகுதியில் மருது வம்சம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட புதிய இயக்கத்தின் தலைமை அலுவலக அடிக்கல் நாட்டு விழா மற்றும் கருமாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து வழிபட்டு,  மாமன்னர்களான  மருது பாண்டியர்களின்  புகைப்படம்  திறக்கப்பட்டு,  மருதுவம்சத்தின் அதிகாரபூர்வ கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது பற்றி அவர்கள் கூறுகையில்,
அகமுடைய இனத்தின் வளர்ச்சிக்கும்,  மேம்பாட்டுக்கும் மற்றும் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் விட்டு சென்ற தேசப் பணியையும், ஆன்மீக பணியையும் மேலும் வலுப்பெற இளைஞர்களாக ஒன்றிணைந்து தலைமை பொறுப்பேற்று உள்ளோம் என தெரிவித்தனர். 

மேலும், இந்த கூட்டத்தில்  மருதுவம்சத்தின் நிறுவனத் தலைவராக திரு. சரவணன் அகமுடையார் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் பொதுச்செயலாளராக திரு. இராஜசேகர் (எ) திலீப் அகமுடையார்,  மாநில செயலாளராக கந்தசாமி அகமுடையார்,  மாநில பொருளாளராக திரு. இராஜ பாண்டியன் அகமுடையார்,  மாநில மகளிரணி தலைவியாக திருமதி. துளசி மணி சக்திவேல் நாச்சியார்,  மாநில கல்வி வளர்ச்சி மேம்பாட்டு தலைவராக விஷ்வா அகமுடையார்,  மாநில தொழில் வளர்ச்சி தலைவராக திரு. விஜயகுமார் அகமுடையார் ஆகியோர்  தேர்ந்தெடுக்கப்பட்டு  நியமிக்கப்பட்டுள்ளனர். 
மேலும் இந்த விழாவில் சமுதாய பெரியவர்களும்,  தாய்மார்களும் கலந்து கொண்டுள்ளனர். 

முதற்கட்டமாக இன்று முதல் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.