கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கரட்டடிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார
இவ்விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 54 மாணவ மாணவிகளுக்கு விலைஇல்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
திமுக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது கூட மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.
இன்று வரை 59 லட்சத்து 34,000 மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்குகிற திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு தலைவர்களும் திட்டங்களை கொண்டு வரும்போது மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கித்தான் தங்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 7.5 சதவிகித இட ஒதுக்கீடை கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி போன்ற தலைவர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை நோக்கி பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
மாணவர்கள் அனைவரும் தங்களது நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.