ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் பொதுமக்களுக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நசியனூர் பள்ளிபாளையம் என்ற இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சியில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நலத்திட்டங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனபிரியா,
பேரூர் செயலாளர் மோகன சுந்தரி,
5-வார்டு கவுன்சிலர் நந்தினி,
6-வார்டு கவுன்சிலர் பிரபா, மற்றும்
5-வார்டு செயலாளர் சுந்தரம்,
6-வார்டு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, 8- வார்டு செயலாளர் ஜவகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மேட்டுபாளையம், சிஎஸ்ஐ வீதி, பெரிய மாரியம்மன் கோவில், சித்தர் குட்டை, தொட்டிபாளையம் உள்பட ஒன்பது இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த இடங்களிலும் பொது மக்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நசியனூர் பகுதியில் இன்றும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.